நான் ஜீவ பயணம் போகின்றேன்
இது தான் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையா?
நான் சில வருடங்களுக்கு முன்பு, இயேசு கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன்.
- ஒரு நல்ல சபைக்குச் செல்கின்றேன்.
- ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டேன்.
- பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டேன்.
- சபையின் ஊழியங்களில் பங்குகொள்கின்றேன்.
- ஒழுங்கான வேத வாசிப்பும் ஜெபமும் உண்டு.
ஆனால், முதலில் இருந்த உற்சாகமும் சந்தோஷமும் இப்போது இல்லை.
- கண்களின் இச்சை,
- போட்டி, பொறாமை,
- குற்ற மனசாட்சி,
- மனக்கசப்பு,
- பொருள் ஆசை,
- சொத்து சண்டை, மாமியார் – நாத்தனார் சண்டை,
- சபையில் சண்டை, ஊழியர்கள் மத்தியில் சண்டை,
- உலகக் கவலை
போன்ற பல காரியங்களே என் தினசரி வாழ்க்கையாக இருக்கின்றன.
இயேசு கிறிஸ்துவின் மீது எனக்கு இருந்த
- உற்சாகமான அன்பு,
- பரலோக வாஞ்சை,
- ஊழிய பாரம்,
- பரிசுத்த ஆவியின் பெலன்,
- பரிசுத்த பிரசன்னம்
எல்லாமே மங்கிப்போய்விட்டன.
இதை வாசிக்கும் போதே, "ஆம்! இது தான் என் கதை" என்று சொல்கிறீர்களா?
"சரி ஆகிவிடும், சரி ஆகிவிடும்" என்று சொல்லிக்கொண்டே வருடங்கள் ஓடுகின்றன. ஆனால், உங்களுக்குள் ஒரு மாற்றமும் இல்லை.
சபையில் மற்றவர்களுக்கு முன்பாக ஒரு நல்ல கிறிஸ்தவனாகவும், தனிப்பட்ட வாழ்க்கையில் பாவத்தால் கட்டப்பட்ட ஒருவராகவும் வாழ்கின்றோம்.
இதற்கு காரணம் என்ன?